ஞாயிறு, 5 டிசம்பர், 2010

நீ சிரித்தால் ..நான் சிரிப்பேன்

நீ சிரித்தால் ... 
   
நீரில் நனைந்த ரோசாவாய், 
நிறம் கூடிச் சிரிக்கும் என்  மனசு.
கானகத்து மூங்கில்களில்
கசிந்து வரும் குழலோசையாய் 
கனிந்து விடும் என்  மனம். 
கொட்டங்கச்சி தம்பூராவில் 
கொப்பளிக்கும் கீதம், என்
குதூகலிக்கும் உள்ளத்தில்.

நீ சினந்தால் ...

நீர் பட்ட காகிதப் பூவாய்
நிறம் வெளுக்கும் என் மனசு.
புல்லாங்குழல் உள்ளில்,
புக மறுத்த காற்றாய்,
ஒலியின்றி ஓலமிடும் .
இதய வீணையின் தந்திகள்
இற்றுப் போகும் மீட்டாமல்.
அரும்பாமலே,வதங்கி
அப்பொழுதே  கூம்பிப் போகும்.
என் இதயம்.              

8 கருத்துகள்:

  1. நீ சிரித்தால்
    விண்மீன்கள்
    வியக்குதடி
    நீ சினந்தால்
    தொடுவானம்
    கூடே சிவக்குதடி ..........

    பதிலளிநீக்கு
  2. ஆகா நமக்கு முன்னாடியே கவிஞர் வந்து ஒரு கவி பாடிடு போயிருக்காரே...

    சூப்பர்...தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  3. உன் வருகை கண்டு,

    உருகுதையா என் உள்ளம்..

    நன்றிங்க தினேஷ் குமார்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு வணக்கம்.

    ரொம்ப நன்றிங்க ஹரிஸ்..

    பதிலளிநீக்கு
  5. தொடர் கவிதைகள் அருமையாக உள்ளது அய்யா

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.. ஹரிஸ்

    பதிலளிநீக்கு
  7. அந்த நீ வேண்டப்பட்டவராக மட்டும் இல்லாமல் யாராய் இருந்தாலும் சிரித்தாலும் சினந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தினால் நீங்கள் போற்றப்படுபவர் ஆவீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. G.M.B..sir...தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சியை தருகிறது...

    பதிலளிநீக்கு