சொச்சம் இருக்கும் கண்களில்,
மிச்சம் இருக்கும் உயிர், ஊசலாட,
கணக்கற்ற ரேகைகள், காலக் கோடுகளாய்,
கன்னத்தில் படர்ந்தவள். நிலை இல்லா தலை,
கழுத்தின் மேல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய்.
ஊழ்வினையாளோ, உண்ண உணவின்றியோ,
உயரம் சுருங்கிப் போனவள்.
குள்ளமான இந்தத் தாய், இன்று,
குப்பை பொறுக்கி பிழைக்கிறாள்.
அனாதையா?. ஆக்கப்பட்டவளா?.
தெரியவில்லை .என் நெஞ்சு தகிக்கிறது .
அனாதையாயின்,அவள் தன்மானத்திற்கு,
என் தலை வணக்கம்.
ஆக்கப்பட்டிருந்தால். என் சமுதாயத்தின்
அவலம். சிதைவு. சீரழிவு.
ஈன்ற பொழுதின் பெரிதுவந்திருப்பாள். இத் தாய்.
எந்தத் தாயுமே. அதுவே தாய்மை. அதன் தனித் தன்மை.
இத் தாய். தவிர்க்கப்பட்டு, தனிமை படுத்தப் பட்டாளோ?.
இன்னும், எதற்காக?. ஏன்?. யாருக்காக.
இந்த உயிரை தாங்கி யாசகம் ....
காமாலைக் கண் காலனுக்கு, கடின மனம்.
கண் தெரியவில்லை.கஷ்டங்களின் எல்லைகளில் இருந்து,
இவளை மீட்கும், ஈரமோ, இதயமோ அவனுக்கு இல்லை.
இவளின் நிலை கண்டு அல்லாடுகிறது என் மனம்.
இதயத்தில் வலி. இமையோரம் ஈரம்.
இந்த சீனத்து தாயின் தனிமை துயர் கண்டு.
Kan kalanga vachiteenga pa...
பதிலளிநீக்குஎன்னை நேரில் மிகவும் பாதித்த காட்சி.
பதிலளிநீக்குநன்றி சதீஷ்
அன்புடன்,
காளிதாசன்.
மிகவும் மனதை நெகிழவைக்கும் வரிகள்..._/\_
பதிலளிநீக்கு//ஊழ்வினையாளோ, உண்ண உணவின்றியோ,
உயரம் சுருங்கிப் போனவள்.//