செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நிதரிசனம்.....

அவள் கைத் தொலைபேசியில் கனிவாய் திறந்து, அன்புடன்

அத்தான் என்றபோது, அடங்கிப் போகிறது அவன் மூச்சு.

பிரளயப் பெருக்கம். அந்த ஒரு சொல் மந்திரத்தில்.

பச்சை கிளியாய் சிறகடித்துப் பறக்கிறது. மனம்.


மகிழம்பூ, முல்லை, மல்லிகை, மணம்.மனமெல்லாம் பரவசம்,

மாசறு பொன்னே! வலம்புரி சங்கே என, ஆயிரம் வெள்ளை தேவதைகளின்

அபூர்வ நடனம். அதி காலை பனிச் சிதறல்கள். அங்கே,

ஆதவனால், சொட்டுத் தெறிக்கும் நீரில், பட்டுச் சிரிக்கும்,

பல நூறு கிரணங்களாய் மனம். பச்சை கம்பள புல்வெளி,

பாவையிவள்,பளிங்கு மாளிகை என, அந்த நொடியில்.

அற்புதமான கனவு வாழ்க்கை.


நின்று போன மூச்சை இழுத்து நிதர்சனத்திற்கு வருகிறான்.

வெள்ளி  அனுப்பிட்டிங்களா?  என்ற, அவன் தங்கத்தின் குரல் கேட்டு.

4 கருத்துகள்:

  1. appa.... kavidhaigal ellam super... Thangalin vasagan aagiren naan... Thodarga ungal tamizh thondu

    பதிலளிநீக்கு
  2. வீட்டில் செல்லக்கிளியாக வளர்ந்தவள்....
    அடுப்படிக்குப போனால் கறுத்து விடுவாளென...
    அம்மாவும் அத்தையும் கத்துவார்கள்..
    நம்பி வந்தாள் நாயகனை.....
    வாழ்க்கைப்பட்டு வந்ததோ ஒரு பெருங்குடும்பத்தில்
    நாத்தனார்கள் கல்யாணம்...கொழுந்தானாருக்கு வேலை...
    மாமியாரின் மருத்துவ செலவு...என கணக்கில் அடக்கவே
    முடியாத...தீராத செலவுகள்.........
    கட்டியவன் கட்டிக்கொண்டு சொன்னான்
    பரதேசம் போகிறேன் பார்த்துக்கொள் என்று
    கண்ணில் கண்ணீர்...வயிற்றில் மூன்றுமாத கரு..
    இன்னும் அவளுக்கு தெரியாது கொண்டவனுக்கு
    பிடித்த பலகாரம் என்னவென்று......
    வேரறுத்து வந்தவள் வந்த இடத்திற்கு வேர்கொடுக்க
    விம்மி விம்மி விடை கொடுக்கிறாள்...
    மன்னவனுக்கோ ஒரு கவலை....
    பணம் சேர்த்து வசதி வாங்கி கடமை தீர்க்க வேண்டும்...
    மங்கைக்கோ பல கவலைகள்...
    பணமேன்னவோ வந்தது ..ஆனால் மனமென்னவோ இறந்தது..
    சாய்ந்து கொள்ள தோளில்லை....வீட்டுக்கு ..தலைவனாய்..தலைவியாய்...
    சேவகியாய்...தாயாய்....வேலைகாரியாய்....மூச்சு விட முடியவில்லை...
    பணத்தை பங்கிட்டு பார்த்து பார்த்து செய்தாலும்...
    பந்தங்களுக்கு பற்றவில்லை....குறை சொல்லக் குறைவில்லை
    மன்னவன் கேட்கிறான் கண்மணியே கணக்கென்ன....
    அதனையும் செலவு செய்தாயா...
    எதை சொல்வாள்...எதை விடுவாள்...
    அத்தான் என்று நெஞ்சடைக்க அழைத்தபோது
    அடக்கி கொண்டாள் குமுறும் நெஞ்சை....
    அறைக்கு வெளியே பார்க்கிறாள்....
    ஏங்கும முகங்கள்...காதெல்லாம் இங்கே....
    நெஞ்சை நிமிர்த்தி...மனதை கல்லாக்கி
    கேட்கிறாள் வெள்ளி எப்போது வருமென்று...
    இதுவும் நிதரிசனம்..

    பதிலளிநீக்கு