பட்டணமான என் பட்டிக்காடு
வானை நம்பி,
வயிறு நிரம்பா
விவசாயம் விட்டு
வாழ்வாதாரம் கூட்ட
வசதிகளை தக்க வைக்க,
வாலிபர் பலரும்
வாய்ப்புக்கள் தேடி
வளைகுடா செல்ல
தறிகளும் சாயமும்
திருப்பூர் அழைக்க,
கொல்லை, குடி ,
காடு துறந்து, பலர்
கொல்லத்துக்கும் போக
பட்டணமான என்
பட்டிக்காடு
பால்ய விவாகங்கள்
பதியில்லா பெண்கள்
கதியில்லா பெருசுகள்
விவரமறியா விடலைகள் என
விரக்தியில் வாடி
ஏங்குகிறது என் கிராமம்.
இன்று இளமையை இழந்து.
உண்மை. நம்முடைய தேசத்தின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டு வருகிறது.. விரைவில் ஒரு மிகப் பெரும் மாரடைப்பை நாடு சந்திக்கும்... இப்போ அதுக்கு மூச்சுத் திணறல். கவனிக்கப் படாத கழனிகள், கிழடுகள், பயிர்கள், சிறுசுகள், எல்லாம் இந்த தேசத்தில் இனி சாபமாய் மாறும்.
பதிலளிநீக்கு# ஒன்றை கவனியுங்கள். குழந்தைகளை பெற்றோர்கள் "காப்பகத்தில் விடுகிற போது............................,
பெற்றோர்களை "முதியோர் காப்பகத்தில்" விடுதல் தவறா....................................? என நியாயம் கேட்கப் படும் காலம் இதோ உங்கள் காலடியில். நாம் இன்று எதை விதைக்கிறோமோ..... அதைதான் நாளை அறுவடை செய்ய இயலும்.
மிக்க நன்றி. நல்ல பகிர்வு. வருகை தாருங்கள் நம்ம பக்கம்.
தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி.தொடர்வேன் நான் இனியும்
பதிலளிநீக்குதங்களைத் தொடர்ந்து...
.