செவ்வாய், 2 நவம்பர், 2010

சூத்திரமும் சரித்திரமும்..

சூத்திரமும் சரித்திரமும்

சகடத்தி னிரு
சக்கரம் போல்
பூஜ்யமும் ஒன்றும்
புரிந்தியங்கும் கணினி.

பூஜ்யத்தின் உபயம்,
புவிக்களித்த பாரதம்,
பூஜ்யமாயிராமல்,முதலாய்
இன்று கணினியில்,தரணியில்.

கணினியும், காமமும்
மென்பொருள் இயக்கம் .
இரண்டின் சூத்திரம்
இந்திய சரித்திரம்.

முன்னதும் பின்னதும்
நாம் முன்னோடி .
பல்கிடும் மாந்தரும்
நல்கிடும் திரவியம்
நவின்றிடும் சாட்சி

இன்றைய தலைமுறை
கண் இனி, கணினி.
கணிப்பொறி ஆற்றல்
கடல் பல கடக்கவும்,
காசு குவிக்கவும்,
கண்டெடுத்த
கடவுச் சீட்டு.

ஏழையின் சிரிப்பில்,
இறைவனைக் காண,
இந்தியர் நமக்கு.
இன்னுமோர் வாய்ப்பு.
இனிய நல் வாய்ப்பு.

4 கருத்துகள்:

 1. ஐய்யாவுக்கு வணக்கம். முதல் முறை வருகிறேன். இந்த கவிதை அழகு. மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவுக் கொடுங்கள். தமிழ்க்காதலன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.தங்கள் வருகைக்கு நன்றி.

  தங்கள் கருத்துக்கள் எனக்கு உரமிடுகின்றன.

  பதிலளிநீக்கு
 3. இன்றைய தலைமுறை கண் இனி கணினி -புரிகிறது

  ஏழையின் சிரிப்பில்--புரியவில்லை. நன்றாக உள்ளது

  அன்புடன்,

  பதிலளிநீக்கு
 4. கணினி மென்பொருள் ஏற்றுமதியாயால்,ஒட்டு மொத்த இந்தியாவும் வளரும்.ஏழைகளின் வாழ்க்கை தரமும் இவ்வளர்ச்சியால் உயரும் என்ற கருத்தில் எழுதியுள்ளேன்.வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு