செவ்வாய், 30 நவம்பர், 2010

என்று தணியும் என் தாகம் ...

என்று தணியும் என் தாகம் ...
















நிசாமாதானுங்க !
நிலத்தடி நீரு,
வேருக்குக் கிழே
வெகு ஆழம் போச்சுது.

கடல் நீரும்   
கன தூரம் கசிஞ்சு, 
ஊருக்கு உள்ளே, 
உட்புகலாச்சுது.

ஆறு, குளத்துலே 
அமில அழுக்கும், 
கழிவு நீரும் கலந்து, 
கூவம் போல ஆச்சுது.

கொட்டலை 
குழாயிலே 
சொட்டு சொட்டா
சொட்டுது நீரு.

ஏங்கி நிக்கிறேன் 
எக்கி எக்கிப்  பார்க்கிறேன்.
என்று தணியும் 
என் ...தாகம்....                 

2 கருத்துகள்:

  1. That which can not be cured must be endured.

    தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. "மனமிருந்தால் மார்க்கமுண்டு",வரும் தலை முறைக்காக தவிர்க்கப் பட வேண்டும்.நாம் எல்லோரும் ஒருமுகப் படுத்தி செயலாற்றினால் வானத்தையும் வளைக்கலாங்க.

    பதிலளிநீக்கு