பெண்ணாய் ..எங்கள் பெரும் தவமாய் ..
தாயமுதுக்கு ஏங்கி
தலைப்புக்குள் முயங்கி
தன்னிறைவோடு மடி மீது
தலை சாய்க்கும் மழலை.
காதலால் கட்டுண்டு
காமக் கணைகளால் தாக்குண்டு
களைத்து கண்ணயரும்
கணவன் சாயும் மடி.
முதுமையின் எல்லையில்
மூத்த கிழவி, தன்னைப் பெற்ற
தாய், தன் தளர்வு தான் போக்க
தஞ்சமடைந்த மடி.
இன்னொரு கண் ,
இனியவன்,
இளையவன் தம்பி
பள்ளிக் கதை சொல்ல
பாசமுடன் தலை கோதி
தலை சாய்க்கும்
தமக்கை மடி.
உழைத்துக் களைத்து
உருக்குலைந்த தந்தை
உயிரனைய மலர்க்கொடி நீ
உன் மலரனைய மடி மீது
உயிர் முடங்கும். முன் உறங்கும்.
தாயாய், தாரமாய்
தமக்கையாய், மகளாய்
பெண்ணே !நீ எங்கள்
பெரும் தவமாய் ....
நன்றாக உள்ளது கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குரொம்ப நன்றிங்க எஸ்.கே.
பதிலளிநீக்குபெண்மை கொண்டாடுவோம். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதிரு.G.M.B அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ..
பதிலளிநீக்குபெண்மைக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம்.
பதிலளிநீக்குஅய்யாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல ...
பதிலளிநீக்கு