விழிப்பது எப்போதோ?. ..விடியும் அப்போதே !
( திரு ஜெகதீஸ்வரன், பதிவு மூலம் இரா.நடராசன்
அவர்களின் 'ஆயிஷா' என்னும் குறு நாவல் படித்தேன்.
கண்கள் குளமாக நெஞ்சம் கனமாயிற்று ............ )
கற்பித்தல் பெரும்பேறு
கற்றல் அதனினும் சுகம் என்ற
குருகுல வாசங்களும்
குரு சிஷ்ய நேசங்களும் மறைய
அரும்பு மலர்களின்
மலரும் மனங்களில்
எழுகின்ற
எண்ணற்ற வினாக்கள்,
விடை தெரியா கேள்விகள்
வினவுமுன் மடிந்து போகும்.
அதட்டல், அச்சுறுத்தல்
ஆயுதமாய், ஆசான்கள் சிலர்.
அரக்கராய் அவதாரம்.
ஆயிரமாயிரம் ஆயிஷா,
அன்றாடம் மடிகிறார்.
அடிப் பிறழா மனனம்,
அப்படியே துப்பல் என,
அடிமையாய் மனம்.
உண்மைத் தேடல்கள்
ஊமையாகிப் போக,
விழிப்பது எப்போதோ?.
விடியும் அப்போதே !
விடியலுக்கு வேண்டிய எழுத்துக்கள்..அருமை
பதிலளிநீக்குபடைப்பாளி அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.
பதிலளிநீக்குullathai thodum unarvupoornamana varihal. Superb! ற் ku pirahu ப் varadhu. mannikavum! mudhal vari!
பதிலளிநீக்குதிரு.தியாகு அவர்களின் வருகைக்கு மனமார்ந்த நன்றி.பிழையை திருத்தி விட்டேன்.என்றும் அன்புடன் ..
பதிலளிநீக்கு