செவ்வாய், 30 நவம்பர், 2010

என்றும் சேராத இணைகோடுகள் !


என்றும் சேராத இணைகோடுகள் !
அலையும் கூந்தல் 
அழகிய கண்கள் 
ஓடியும் இடை 
ஓவியத் தோற்றம்.
பூனை நடையில் 
பூவுலக அழகி 
பளிங்குச் சிலையாய்
பந்தலிட்ட மேடையில்.அடைந்த கண்கள்
உடைந்த பற்கள் 
ஒட்டிய வயிறு
ஒல்லியான தேகம் 
ஒரு சாண் துணி 
முட்டிக் கால் 
தட்டும் நடை 
பரட்டைத் தலை 
பந்தல்காரன் 
கந்தலுடன் கீழே .        


நன்றி :கூகுள் படங்கள் 

10 கருத்துகள்:

 1. மனம் விழைகிறது கட்டழகி காண,

  மனம் பதறுகிறது கந்தல்காரன் காண,

  மனதிலும் சேராத இணைகோடுகள்தான்.

  நிறையவே சிந்திக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. விழைவதையும்,பதறுவதையும் ரொம்ப விவரமா சொன்னீங்க.நன்றிங்க அய்யா G.M.B ..

  பதிலளிநீக்கு
 3. படம் சொல்லும் பாடம்
  கவி சொன்ன வழ்வு
  கரையாத மனமிங்கு
  கடைவரை கந்தல்
  கோலம்தான் கனிவான
  வாழ்வில்லை.........

  பதிலளிநீக்கு
 4. with jaffna tamil type writer wrote a poem (appadi than sollikanum) but when copied it here it was gone. what i wrote was hunger is there no sufficient food yet when i see the pretty woman, heart flies to world of lust

  பதிலளிநீக்கு
 5. Hunger and lust are basic needs of all specices..which is predominant depends on factors governing at that instant..thanks for the visit..feel greatly elated..

  பதிலளிநீக்கு