செவ்வாய், 30 நவம்பர், 2010

சற்றே சிந்திக்க....

சற்றே சிந்திக்க....

பிரவேசம் மறுக்கப் பட்டவன் கட்டிய கர்பகிரகம்.

ஏசி   எட்டி  உதைத்து,   குடித்து 
வாந்தி எடுத்ததை தன் கையில்
 ஏந்தி,  முந்தானையால் அவன்
 வாய்  துடைக்கும்  மனைவி.தாசி எனக் காறி உமிழ்ந்து, தனக்கு குடிக்க காசு கேட்கும், கயவன் கணவன்.

எப்போதோ ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவன் திரும்ப ,என்றும் அகக் கடலில் அலையின்றி காத்திருக்கும் அல்லி.

காதல் தோல்விகளால் தாடி வளர்த்து சாமியாராகிப் போனான்.கன்னிகள் இப்போது அவன் காலடியில்.

சாப்பிட்ட கோழி வயிற்றில் கொக்கரித்ததால்,விடிந்ததென்று வெளியே போனான்.

லேட் ஆயிடுச்சு வர்றட்டா...                 

4 கருத்துகள்:

  1. ஏமாற்றப்படுபவனும், மிதிக்கப்படுபவனும், நிமிர்ந்து நின்றால் இந்த உலகம் தாங்குமா.?

    பதிலளிநீக்கு
  2. உண்மை தானுங்க.இப்போது தான் தலை நிமிர ஆரம்பித்துள்ளோம்..

    பதிலளிநீக்கு
  3. yenraikooo thalai nimirnthu vitom.. nimirnthu vitom yenra yenam ippo than mullai vida aramba magirathu.

    பதிலளிநீக்கு