ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நிலவே நீ என்னைச் சுடாதே .1.

நிலவே நீ என்னைச் சுடாதே .1.

அங்கேயே இருங்கள்! அள்ளிச் செல்வம் குவியுங்கள் !
இங்கே ஓர் அபலை இருப்பதையே, மறந்தீர்!. என்றாள்.
அடுக்கடுக்காய் அள்ளிக் கொட்டினாள். என் அல்லிக்கொடியாள்.
அல்லலில், அங்கே அங்கலாய்க்கிறாள். என் அங்கயர்க்கண்ணி.

பாலை வெளியில் பாழும் வெய்யிலாய், பதைக்குதே என் மனம்.
பாவை அவள் சொல் பாய்ச்சியதே, இதயத்தில் இன்னுமோர் கூர் அம்பு.
எப்படிச் சொல்வேன். என் சொல்லித் தெரிய இயலா சோகங்களை.
எவருக்குப் புரிய வைப்பேன் ?.என் இதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை.

பித்தனாய் பேதலித்துப் போனதும், நித்திரை இன்றி,
நித்தமும் நடைப்பிணமாய், நான் படும் அவலங்களை,
பிரிவுகளின் பெரும் துயரில், எண்ணுகிறேன். ஏன் பிறந்தேன் ?.
பிறக்காமலே இருந்திருக்கலாம். பிறந்த அன்றே இறந்திருக்கலாம்.

( நிலவு இன்னும் சுடும் ......)

     
         

2 கருத்துகள்:

  1. வாழ்த்து சொல்லி வழியனுப்பினேன்
    எனக்காக சென்றான் என்னவன் என்று
    பெருமிதம் கொண்டேன்....
    நான் கேட்டதெல்லாம்
    கடனில்லா வாழ்க்கை...
    நித்தம் சுடு சோறு..
    நமக்கென்று ஒரு குடில்..
    இல்லையென்று சொல்லாத மனம்..
    அய்யகோ ...எதுவும் வேண்டாம்....
    நீ இல்லை எனில்...பசியில்லை...
    உறக்கம் இல்லை.....பாதுகாப்பு இல்லை...
    வாழக்கையே இல்லை...
    நான் மேதை அல்ல...ஒரு பேதை...
    நீ மட்டும் இருந்தால் போதும்...
    வேறெதுவும் வேண்டியதில்லை...
    வந்து விடு மன்னவா.......
    ராமன் இருக்கிமிடமே இந்த சீதைக்கு அயோத்தி..

    பதிலளிநீக்கு
  2. காத்திரம்மா! சற்றே!
    காலம் கனியட்டும்.
    கடமை முடியட்டும்.
    கனவும் நனவாக.
    உன் நினைவும்.நிசமாக.

    பதிலளிநீக்கு