வியாழன், 14 அக்டோபர், 2010

வணக்கம் .3.
நாட்டின் நாடி நரம்பெல்லாம்,தொடுகின்ற இரத்த,
நாளங்களாய்  கண்ணாடி நார்  இழைகள்,
இந்தியாவின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் ,
இணைய தள அதிவேக இணைப்புக்கள்.
கணக்கில்லா கணினிகள், கோடானு கோடி,
மனிதப் புள்ளிகளை, மாயாவி போல்,
நொடியில் இணைக்கின்ற, தொலை தொடர்பு.
எட்டாத முடுக்குகளில் இருக்கும் எளியோர்க்கும்,
சட்டென சடுதியில், கிட்டிடும்  தகவல் வசதி.
கட்டாயமாய் கல்வி , மருத்துவம், அரசாங்க சேவை ,
கணினி, தண்ணீர், பால், நோய் தடுப்பு என,
அடிப்படை வசதிகள் அனைத்தும்,
அனைவருக்கும் கிடைத்திட, அறிவு ,
அறிவுசார் பொருளாதாரம், இவையே,
அடுத்த தலை முறைக்கு ஆயுதமாய்,
ஆயத்தமாக்கவும், உழைப்பை மதிக்கவும்,
உற்பத்தி திறன் பெருக்கவும், திட்டம் தீட்டி,

" இணையில்லை இந்தியர்க்கு இனியும் ,
இவர் துணை வேண்டி உலகம்,இனி  அலையும்."

என்ற நிலைக்கு கொண்டு வர, பாடுபடும் ,
சாம் பிட்ரோடா வுக்கும், அவர் தம் குழுக்கும்.
 இன்னுமோர் வணக்கம்.இதயம் கனிந்த நன்றி              

2 கருத்துகள்:

 1. என் குரு டாக்டர். சாம் பிட்ரோடா அவர்களுக்கு கவிதையால் வணக்கம் செலுத்தியதற்கு மிக்க நன்றி.

  //மனிதப் புள்ளிகளை, மாயாவி போல்,
  நொடியில் இணைக்கின்ற, தொலை தொடர்பு//

  அருமை...

  வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 2. திரு ரவிச்சந்திரன் அவர்களே,

  வணக்கம்.தங்களின்
  பின்னூட்டத்திற்கு
  என் மனமார்ந்த
  நன்றி...

  பதிலளிநீக்கு