நாடு விட்டு நாடு.
நாட்பட்ட கடிதம்.
நலம் நாடி,
தங்களின் இடம்
தேடி, ஓடி வரும்.
மன்னிப்பீர்!
மறந்தேனில்லை!
தங்களைஇன்னும், இன்றும்.
மறுபடியும்,
மடல் மூலம்,
மனக்கதவு
திறப்பீர்.
எல்லையில்லா நீரால்,பல சமயம்
தத்தளிக்கும் நம் நாடு விட்டு,
தொல்லையில்லாமல், மணல்வெளியில்,
நீர் நீந்தக் கற்றீர்.
நீரில்லா நீர் நிலையில்,
நீந்தக் கற்ற வித்தகரே.
நீரில்லாமல் நினைவில்,
நித்தமும், தவிக்கிறேன்
அன்பு நண்பனே அறிவீர்!
உடன் மடல் எறிவீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக