முஷ்டாகின் பதில்கள் .2.
என் கேள்வி:
நன்றாக படித்த,உழைக்கத் தயங்காத நீங்கள், சிக்கனமாய்
இருந்து வீடு கட்டியிருக்க கூடாதா?.
திரு முஷ்டாக்:
வீடு இல்லை தமக்கென ,வருஷம் இருபதாச்சுது,
மாடு போல உழைச்சு, கையும் காலுமசந்து போச்சுது .
பாடுபட்டுப் பரிதவிச்சும், பயனுமில்லா தாச்சுது.
ஏடு படிச்சு, என்ன லாபம்?. என்றும் வறுமை ஆச்சுது.
ஆறு மாதம் தவமிருந்து, ஆறு நூறு சேமிப்போம்,
ஆறு போல செலவு வந்து, அடித்துக் கொண்டு போய்விடும் .
கடனை வாங்கி, உடனை வாங்கி, ஜால வித்தை காட்டுவோம்.
கடனை தீர்க்க கடனை வாங்கி நாளும் பொழுது ஓட்டுவோம் .
என் கேள்வி :
14ஆண்டு சவுதி வாழ்க்கைக்கு பிறகு தற்போது உங்கள் நிலை
என்ன?.
திரு முஷ்டாக்:
உண்ண ஏதும் குறைவில்லை.நுழைந்திடாத கடையில்லை,
எண்ணம் போல,குவித்த பொருட்கள், நிறுத்து பார்க்க எடையில்லை.
மண்ணகத்தில் மனையை வாங்கி, வீடு கட்டத் தடையில்லை.
கண்ணைப் போன்ற மக்கள் படிக்கக், கொடுக்க பணம்,முடையில்லை.
பாலை,எந்தன் பாலன் காண, பாலைவனத்து வாழ்க்கையாம்.
சேலை எந்தன், மனைவி வாங்க ,காலை மாலை வேலையாம்.
மாலை எந்தன், மகளும் காண, வேலை ஏதும் செய்குவேன்.
வேலை ஒன்றில், மகனும் சேர, இரவும் வேலை பண்ணுவேன் .
( வினாவும் விடைகளும் இன்னமும் தொடரும் ...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக