ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நிலவே நீ என்னைச் சுடாதே .3.

நிலவே நீ என்னைச் சுடாதே .3.

அயர்ந்து உன் மடியில் தலை சாய்த்து,
உலகை மறந்து உறங்க வேண்டும்.
அன்பு மகன் பிஞ்சு முகம் பார்த்து,
கை கோர்த்து கதை சொல்லவேண்டும்.

கூழானாலும் உன் கையால் குடித்து,
கூடலும் பின் ஊடலுமாய் வாழ வேண்டும்.
கணுக்காலில் மெள்ளவே கிலு கிலுக்கும்
சலங்கை சத்தம். காதருகே உன் கனல் மூச்சு ..
மூக்குத்தி வெளிச்சத்தில்...
முணுமுணுத்த கதைகள்..இன்னும் பல...
நெஞ்சில் மூட்டுதே நெருப்பு ..
பிரிவின் பெரு வேதனை... தருகுதே தவிப்பு ..
நறு முகையாளே! நம் இதயப் பிரளயங்கள் ..
இன்னும் எத்துனை நாள் .....

கை நிறைய இல்லாவிடினும்,
கடனின்றி வாழல் வேண்டும்.
கரை கடந்து, காலத்தே உன் மடியில்
கண்ணயர வேண்டும். வருவேன்.
உனைத் தேடி, விரைவில். வருந்தாதே!.
வதைக்காதே !ஒரு போதும். சொல்லால்
எனை சோர்விழக்க செய்யாதே!.
நைந்த நூலில் நெய்த துணியாய்,
கிழிந்ததே, இன்று என் மனம்.
நினைவெல்லாம் நிறைந்த என்
நிலவே, இன்று நீ எறிந்த பாணம்.

இனி ஒரு பிறவி வேண்டேன்.
பிறப்பின் பிரிவு வேண்டேன்.
கனியே !கண்மணியே! என் காதலியே!
கொஞ்சம் பொறு. எட்டத் தூரம் இல்லை. இன்னும்
கொஞ்சம் தான். நாயகியே !.
வட்டியுடன் முதலாய் வாழ்ந்திடுவோம். என்
வஞ்சிக்கொடியே! எதிர் வரும் காலம், இனி
நம் கையில். நறு முகையாளே!
நாயகனை நம்பு!.    

               
       
.

10 கருத்துகள்:

 1. படைப்பாளி அவர்களுக்கு
  என் மனங்கனிந்த நன்றி.

  காளிதாசன்.

  பதிலளிநீக்கு
 2. திரு.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு,

  தங்கள் பாராட்டுக்கு
  நிரம்பவும் நன்றி.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்,
  காளிதாசன்

  பதிலளிநீக்கு
 3. மன்னவா ' இதுவும் கடந்து போகும்'
  நாம் நிமிர்ந்து நின்று வானம் பார்க்கும் காலம் வரும்
  தளராதே என்னை தளர விடாதே ...
  நீ செய்யும் தியாகம் இன்று....
  நாளைய நம் எதிர்காலம் ...
  நான் கண்மூடி காண்கின்றேன்...
  நேற்றைய நம் வசந்தம்..
  இனி வரும் சொர்க்கம்...
  இதுவே இன்று எனக்கு ஊக்கம்....
  முன்னை விட நீ என் மனதில்,
  மதிப்பில், மலையாய்..
  காத்திருக்கிறேன் கட்டுகடங்காத காதலோடு...
  கரை சேர்வோம் ...கரம் சேர்த்து.....

  பதிலளிநீக்கு